Please enable javascript.கன்னியாகுமரி மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024, Kanniyakumari constituency Lok sabha election results 2024 live updates in tamil

கன்னியாகுமரி மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024 (Kanniyakumari constituency lok sabha election results 2024)

தென் தமிழகத்தின் மிக முக்கிய தொகுதியான கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி பற்றிய விரிவான அலசலை இங்கு காணலாம்.

கன்னியாகுமரி மக்களவைத் தேர்தல் முடிவு

தொகுதி எண்: 39 | மக்களவைத் தொகுதி: கன்னியாகுமரி
  • 2024
  • 2019
விஜய் வசந்த் என்கிற விஜயகுமார்5,46,248
CONGWON
வேட்பாளர் பெயர்வாக்குகள்முடிவு
ஆண்டனி மைக்கேல் ஜே175
INDLOST
அய்யப்பன் வி373
INDLOST
பாலசுப்ரமணியன் டி2,079
INDLOST
பெரிலா எல்3,262
INDLOST
டெனிசன் வி1,278
INDLOST
எசக்கிமுத்து என்441
INDLOST
கீதா எம்554
TKLOST
கிருஷ்ணன் பி256
INDLOST
மரியா ஜெனிபர் கிளாரா மைக்கேல்52,721
NTKLOST
நாகூர் மீரான் பீர் முகமது4,415
INDLOST
NOTA3,756
NOTALOST
பாசிலியன் நஸரத்41,393
AIADMKLOST
பி ராதாகிருஷ்ணன்3,66,341
BJPLOST
ராஜன் சிங்598
BHUDRPLOST
ரமேஷ்குமார் ஜே.எல்469
INDLOST
சாந்தகுமார் என்533
INDLOST
சரவணன் என்315
SMKNKLOST
சதீஷ் பாபு பி748
INDLOST
டாக்டர் டாம் மனோகர் சி எம்1,086
PNDPLOST
வெங்கடேஷ் எஸ்.சி189
INDLOST
விஜயன் ஜி1,623
BSPLOST
வினோ ஜெப சீலன் டி271
INDLOST
மேலும் தெரிந்து கொள்ள
கன்னியாகுமரி மக்களவைத் தேர்தல் தகவல்

இந்தியாவின் தெற்கே கடைக்கோடியில் உள்ள மாவட்டம்தான் கன்னியாகுமரி. கடல் சூழ்ந்த இந்த மாவட்டம் மிகவும் பிரபலமான சுற்றுலா தளமாகும். கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை உலகப் புகழ் பெற்றது. நாகர்கோவிலை தலைநகரமாகக் கொண்ட இந்த மாவட்டத்தில் தமிழ் மற்றும் மலையாள மொழி பேசும் மக்கள் உள்ளனர். கன்னியாகுமரி தமிழ்நாட்டின் ஒரு சிறிய மாவட்டமாகும். பரப்பளவில் மிகச்சிறிய மாவட்டமாக இருந்தாலும் மக்கள் அடா்த்தியில் சென்னைக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளது. கல்வியறிவில் முன்னிலை வகுக்கிறது.

கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை பார்ப்பதற்காகவே தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல நூற்றாண்டுகள் பழமையான மதத் தளங்கள் உள்ளன. சித்தா, ஆயுர்வேதம் மற்றும் வர்மக்கலை உட்பட பண்டைய இந்தியாவின் சுகாதார பாரம்பரியத்துக்கு இந்த மாவட்டம் பெயர் பெற்றது. திரிவேணி சங்கமம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல் மற்றும் அரேபிக் கடல் ஆகிய மூன்று கடல்களும் இங்கு சந்திக்கின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கில் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம், வடக்கு மற்றும் கிழக்கில் திருநெல்வேலி மாவட்டமும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும் எல்லைகளாக உள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சி மன்றங்களையும், 51 பேரூராட்சிகளையும், 9 ஊராட்சி ஒன்றியங்களையும், 95 கிராம ஊராட்சிகளையும் கொண்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்கள் தொகை 18,70,374 ஆகும். அதில் ஆண்கள் 926,345 பேர். பெண்கள் 944,029 பேர்.

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் கன்னியாகுமரி 39ஆவது தொகுதி ஆகும். தொகுதி மறுசீரமைப்பு காரணமாக நாகர்கோவில் மக்களவைத் தொகுதி பெயர் மாற்றம் பெற்று, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியாக மாற்றப்பட்டது. கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் கன்னியாகுமரியில் உள்ளன. கடைசியாக 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற 17வது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எச். வசந்தகுமார் பாஜக வேட்பாளரான, பொன்.இராதாகிருஷ்ணனை 2,59,933 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அந்த தேர்தலில் வசந்த குமார் மொத்தம் 6,27,235 வாக்குகள் பெற்றிருந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பொன்.இராதா கிருஷ்ணன் 3,67,302 வாக்குகளை மட்டுமே பெற்றார். வசந்தகுமாரின் வாக்கு சதவீதம் 59.83% ஆக இருந்தது. அதற்கு முந்தைய 2014ஆம் ஆண்டுத் தேர்தலில் வசந்தகுமாரை பின்னுக்குத் தள்ளி பொன்.இராதா கிருஷ்ணன் வெற்றி பெற்றிருந்தார். அந்த சமயத்தில் பொன்.இராதா கிருஷ்ணன் 3,72,906 வாக்குகளையும், வசந்தகுமார் 2.44,244 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

2019ஆம் ஆண்டுத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக வி.ஜெய்தீன், அமமுக கட்சியின் சார்பாக இ.லக்‌ஷ்மன், மக்கள் நீதி மய்யம் சார்பாக ஜே.எபினேசர் போன்றோர் போட்டியிட்டனர். நோட்டாவில் 6,131 பேர் வாக்களித்திருந்தனர். கடந்த தேர்தல்களில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கமே கன்னியாகுமரியில் இருந்துள்ளது. நாம் தமிழர் கட்சியும் தனது வாக்கு வங்கியை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. சட்டமன்ற தொகுதிகளில் கன்னியாகுமரி அதிமுக வசமும், நாகர்கோவில் பாஜக வசமும், குளச்சல் காங்கிரஸ் வசமும், பத்மநாபபுரம் திமுக வசமும், கிள்ளியூர் காங்கிரஸ் வசமும் உள்ளன.

Disclaimer:This Data is provided by the Association for Democratic Reforms (ADR) | MyNeta and sourced from election affidavits available in the public domain of the Election Commission of India.