Please enable javascript.தேனி மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024, Theni constituency Lok sabha election results 2024 live updates in tamil

தேனி மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024 (Theni Lok Sabha Election results 2024)

தமிழகத்தின் மிக முக்கிய தொகுதியான தேனி நாடாளுமன்றத் தொகுதி பற்றிய விரிவான அலசலை இங்கு காணலாம்.

தேனி மக்களவைத் தேர்தல் முடிவு

தொகுதி எண்: 33 | மக்களவைத் தொகுதி: தேனி
  • 2024
  • 2019
தங்க தமிழ்செல்வன்5,71,493
DMKWON
வேட்பாளர் பெயர்வாக்குகள்முடிவு
ஆதிமுத்துக்குமார் எம்592
INDLOST
அஜீத்குமார் எஸ்3,006
INDLOST
சார்சில் துரை பி1,937
HFPPLOST
ஹரிகிருஷ்ணகுமார் ஆர்486
INDLOST
ஜீவா எம்2,308
BSPLOST
ஜாங்கில்பெர்ட்ராஜ்603
INDLOST
குமார்377
INDLOST
மதன்76,834
NTKLOST
மணிகண்டன் ஆர்1,201
INDLOST
முடியரசு1,094
AIYDPMPLOST
முத்துக்குமார்543
INDLOST
நாராயணசாமி வி டி1,55,587
AIADMKLOST
NOTA11,336
NOTALOST
பாண்டிகுமார் எஸ்3,967
INDLOST
பரமசிவன் எஸ்2,866
INDLOST
பார்த்திபன் ஜி2,277
INDLOST
பிரகாஷ் பி6,298
INDLOST
பிரேமா எஸ்1,232
INDLOST
ரேவதி கே1,128
INDLOST
சதீஷ் குமார் ஏ453
INDLOST
சேதுபதி ஜி617
INDLOST
தியாகராஜன் ஓ வி932
INDLOST
டிடிவி தினகரன்2,92,668
AMMKMNKZLOST
வசந்தா சரவணன்805
INDLOST
விஜயன் கே667
INDLOST
மேலும் தெரிந்து கொள்ள
தேனி மக்களவைத் தேர்தல் தகவல்

'தேனி பாராளுமன்ற தொகுதி'.. வேட்பாளர்கள் யார்யார்? இம்முறையாவது திமுக கூட்டணி வெல்லுமா?
தேனி பாராளுமன்ற தொகுதி, அதிமுகவின் கோட்டையாக திகழ்கிறது. கடந்த முறை, தமிழகத்தில் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி வென்றபோதும், தேனியில் மட்டும் வெல்ல முடியவில்லை.

தேனி பாராளுமன்ற தொகுதி உருவாகி, 15 வருடங்கள் தான் ஆகிறது. அதற்குமுன், பெரியகுளம் பாராளுமன்ற தொகுதியாக இருந்த நிலையில், மறுசீரமைப்புக்கு பிறகு தேனி தொகுதியாக உருவெடுத்தது.

பெரியகுளம் மக்களவை தொகுதி:
2008 வரை இருந்த பெரியகுளம் மக்களவை தொகுதியில், 5 தேனி மாவட்ட சட்டமன்ற தொகுதிகளும், ஒரு மதுரை மாவட்ட சட்டமன்ற தொகுதியும் இருந்தன. தேனி சட்டமன்ற தொகுதி, பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம், போடிநாயக்கனூர் ஆகிய 5 தேனி சட்டமன்ற தொகுதிகளும், மதுரையில் இருந்து சேடபட்டி சட்டமன்ற தொகுதியில் பெரியகுளம் மக்களவை தொகுதியில் இருந்தன.

இரண்டு தனி தொகுதிகள்:
பெரியகுளம் தொகுதி, மறுசீரமைப்புக்கு பிறகு, தேனி மக்களவை தொகுதியாக மாறியது. இதில், 4 தேனி சட்டமன்ற தொகுதிகளும், இரண்டு மதுரை சட்டமன்ற தொகுதிகளும் இருக்கின்றன. சோழவந்தான், பெரியகுளம் ஆகிய இரண்டு தனித் தொகுதிகளும் அடங்கும். தேனி மக்களவை தொகுதி உதயமான பிறகு, தேனி சட்டமன்ற தொகுதி நீக்கப்பட்ட நிலையில், சோழவந்தான் சட்டமன்ற தொகுதி புதிதாக இணைக்கப்பட்டது.

கடந்த மூன்று முறை வென்றவர்கள்:
2009-ல் தேனி மக்களவை தொகுதியில், திமுக கூட்டணி சார்பாக போட்டியிட்ட ஜே.எம். ஆரூன் ரஷீத், அபார வெற்றியைப் பெற்றார். அடுத்து, 2014, 2019 ஆகிய இரண்டு வருடங்களில், அதிமுகவை சேர்ந்த ஆர், பார்த்தீபன், ரவீந்திரநாத் குமார் ஆகியோர் வெற்றியைப் பெற்று, எம்பி ஆனார்கள்.

2019-ல் யார் யார், எவ்வளவு வாக்கு?
2019-ல் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாருக்கும், காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவனுக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. இதில், ரவீந்திரநாத் 5,04,813 வாக்குகளை பெற்ற நிலையில், இளங்கோவன் 4,28,120 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார்.

அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் 1,44,050 வாக்குகளை பெற்ற நிலையில், நாம் தமிழர் வேட்பாளர் ஷாகுல் ஹமீத் 27,864 வாக்குகளை பெற்றார்.

அதிமுக பவர்:
அதிமுக இரண்டாக உடைந்து அதிமுக, அமமுக ஆகிய கட்சிகளாக பிரிந்தும் கூட, அதிமுக அங்கு அபார வெற்றியைப் பெற்றது. இதன்மூலம், இரட்டை இலக்கு,தேனியில் பவர் அதிகம் என்றேதான் கருதப்படுகிறது.

அதிமுக vs காங்கிரஸ்:
தேனி மக்களவை தொகுதியில், திமுகவின் செல்வாக்கு சற்று குறைவாக தான் இருக்கிறது. இதனால், இத்தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்க வாய்ப்புகள் அதிகம். மேலும், தேனி அதிமுகவுக்கும் பலவீனம் ஏற்பட்டுள்ளது. தங்கதமிழ்ச் செல்வத் கடந்த முறை 1.44 லட்சம் வாக்குகளை பெற்றார். எம்பியாக தேர்வான ரவீந்திரநாத்தும் தற்போது அதிமுகவில் இல்லை.

2014-ல், அதிமுக சார்பாக எம்பியாக தேர்வுசெய்யப்பட்ட பார்த்திபனுக்குதான் இம்முறை சீட் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது. அதேபோல், விருதுநகர் தொகுதியில் இருந்து அவர், தேனிக்கு மாணிக் தாகூர் சிப்ட் செய்யப்படலாம் எனவும் கருதப்படுகிறது. ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்று சேர்ந்து அதிமுகவை பலவீனப்படுத்திவிட்டதால், இம்முறை தேனி தொகுதியில் திமுக கூட்டணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் எனக் கருதப்படுகிறது.

வாக்காளர்கள் கோரிக்கை என்ன?
தேனி மாவட்டத்தில், மீண்டும் ரயில் சேவையை துவங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அது சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. தேனியில் இருக்கும் சுற்றுலாத்தளங்களை மேம்படுத்தி, தேனியை சுற்றுலா நகரமாக மாற்ற வேண்டும் என்பது தேனி மக்களின் நீண்ட நாள், முதன்மை கோரிக்கையாக உள்ளது.

மேலும், மூல வைகையாற்றில் அணை கட்ட வேண்டும் என்பதும், இத்தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. திராட்சை ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்டும், அது சரிவரை இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. அதேபோல், திராட்சை குளிரூட்டும் கிட்டங்ககியை இன்னமும் கொண்டுவரவில்லை.

பெரியகுளத்தில் இருந்து, கொடைக்கானலுக்கு ரோடுபோட வேண்டும் என்ற திட்டமும் அரைகுறையாகதான் இருக்கிறது. உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள 58ம் கால்வாய் திட்டத்தை, சரியாக பயன்படுத்தி, உரிய நேரத்தில் நீர் திறந்துவிட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. உசிலம்பட்டி அருகே உள்ள மள்ளப்புரம் வழியாக, தேனிக்கு மலைப்பாதையில் அகல பாதை அமைக்க வேண்டும் என்பதும் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இப்படி, தேனி மக்களவை தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் அப்படியேதான் இருக்கிறது.

சாதி ஓட்டுக்கு வேட்டை:
தேனி மக்களவை தொகுதியில், முக்குலத்தோர், தேவேந்திரகுல வேளாளர், நாயக்கர், நாடார் ஆகியோரது ஓட்டும் அதிகம். இங்கு சாதி பற்று சற்று கணிசமான அளவில் இருப்பதால், அந்தந்த சாதியை சேர்ந்த தலைவர்களை ஊர்ஊராக சுற்றவைத்து, அதன்மூலம் ஓட்டு வேட்டையை நடத்துகிறார்கள். இத்தொகுதியில் இதுவே போதும் என்பதால், வளர்ச்சி பணியில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை என மக்கள் சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Disclaimer:This Data is provided by the Association for Democratic Reforms (ADR) | MyNeta and sourced from election affidavits available in the public domain of the Election Commission of India.