Please enable javascript.மயிலாடுதுறை மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024, Mayiladuthurai constituency Lok sabha elections results 2024, Mayiladuthurai election results live updates in tamil, மயிலாடுதுறை லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024

மயிலாடுதுறை மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024 (Mayiladuthurai lok sabha election results 2024)

தமிழ்நாட்டின் ஒவ்வொரு தொகுதியிலும் கள நிலவரம் என்ன, வேட்பாளர்கள் யார், அரசியல் கட்சிகளின் செல்வாக்கு என்ன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி நிலவரத்தைப் பார்ப்போம்

மயிலாடுதுறை மக்களவைத் தேர்தல் முடிவு

தொகுதி எண்: 28 | மக்களவைத் தொகுதி: மயிலாடுதுறை
  • 2024
  • 2019
சுதா ஆர்5,18,459
CONGWON
வேட்பாளர் பெயர்வாக்குகள்முடிவு
பாபு பி2,47,276
AIADMKLOST
பாபு எஸ்1,839
INDLOST
தட்சிணாமூர்த்தி எம்535
INDLOST
இளஞ்செழியன் டி2,898
BSPLOST
ஜஃபருல்லா கான் எஃப்1,242
INDLOST
காளியம்மாள் பி1,27,642
NTKLOST
கார்த்திக் ஏ3,891
SMKNKLOST
மணிமாறன் டி1,711
INDLOST
நாகராஜன் கே1,349
INDLOST
நித்தியானந்தம் எஸ்739
NADLMMKLKLOST
NOTA8,702
NOTALOST
பாண்டியராஜன் எஸ்1,175
INDLOST
சிலம்பரசன் டி1,256
INDLOST
சீனிவாசன் வி617
INDLOST
ஸ்டாலின் எம் கே1,66,437
PMKLOST
திமோதி டி1,175
INDLOST
வேதரெத்தினம் எஸ்782
AMGRDMKLOST
மேலும் தெரிந்து கொள்ள
மயிலாடுதுறை மக்களவைத் தேர்தல் தகவல்

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் 2009ஆம் ஆண்டு மறுசீரமைப்புக்குப் பிறகு மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார், கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ள. இதில் கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் தஞ்சை மாவட்டத்திற்குள் வருகின்றன. முழுக்க முழுக்க டெல்டா பகுதிகளான மயிலாடுதுறை மற்றும் தஞ்சை என இரண்டு மாவட்டங்களில் விரவிக் கிடக்கிறது இத் தொகுதி.

திருவள்ளூர் | வட சென்னை | அரக்கோணம் | காஞ்சிபுரம் | தென் சென்னை | மத்திய சென்னை | சிதம்பரம் | கோயம்புத்தூர் | கடலூர் | தர்மபுரி | தூத்துக்குடி | கன்னியாகுமரி | கிருஷ்ணகிரி | மதுரை | மயிலாடுதுறை | தேனி | திருவண்ணாமலை | நீலகிரி | நாமக்கல் | ஈரோடு | விழுப்புரம் | கள்ளக்குறிச்சி | திருப்பூர் | இராமநாதபுரம் | ஆரணி | சேலம் | சிவகங்கை | ஸ்ரீபெரும்புதூர் | தென்காசி | தஞ்சாவூர் | திருநெல்வேலி | வேலூர்

தமிழ்நாட்டிலேயே ஆன்மீக தளங்களில் அதிகமாக உள்ள தொகுதிகளில் இதுவும் ஒன்று.
மயிலாடுதுறை மாவட்டத்தில்தான் காவிரி ஆறு தனது பயணத்தை முடித்துக்கொண்டு வங்கக் கடலில் கலக்கிறது. தொழிற்சாலைகளே இல்லாத இப்பகுதியில் பெரும்பான்மை மக்கள் விவசாயிகளாகவும், விவசாயக் கூலிகளாகவுமே உள்ளனர். காவிரி ஆறு மற்றும் மேட்டூர் அணையையே இப்பகுதி விவசாயத்திற்கு உயிர் ஆதாரமாக இருந்து வருகிறது. இதுதவிர கடலோரப் பகுதிகளில் மீன்பிடித் தொழிலும் நடைபெற்று வருகிறது.

மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் காவிரியின் கடைமடை பகுதிக்கு முறையாக வந்து சேர வேண்டும், அதற்கான வாய்க்கால்களை தூர்வாறும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கை. ஓன்என்ஜிசி எரிவாயு குழாய்களை அமைப்பதற்கும் இப்பகுதியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. விவசாய தொடர்புடைய ஆலைகளை அதிகமாக அமைக்க வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் கோரிக்கைகளில் ஒன்று.

தொகுதியில் வன்னியர்கள் மற்றும் பட்டியலின மக்கள் அதிகளவில் உள்ளனர். வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாகவும் இவர்களே உள்ளனர். இதுதவிர முக்குலத்தோர் (வாண்டையார்) மற்றும் இஸ்லாமியர்களும் கணிசமான அளவு வசிக்கிறார்கள். இதுதவிர மற்ற சமூகத்தினரும் பரவலாக வசித்து வருகிறார்கள்.

இத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி அதிகமுறை வெற்றிபெற்றுள்ளது. ஆனால், திமுக அல்லது அதிமுக ஆதரவுடன் தான் அந்த வெற்றி சாத்தியமானது. மயிலாடுதுறை தொகுதியில் 1999 மற்றும் 2004 என இரண்டு மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் வெற்றிபெற்று மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். 2009ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவின் ஓ.எஸ்.மணியனிடம் மணிசங்கர் அய்யர் தோல்வியைத் தழுவினார்.

2014 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால், அப்போது வீசிய அதிமுக அலை அதிமுக சார்பில் போட்டியிட்ட பாரதிமோகன் வெற்றிபெறச் செய்தது. மமக வேட்பாளரான ஹைதர் அலி தோல்வியைத் தழுவினார். 2019 மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் நேரடி போட்டி நிலவியது. ஆனால், தமிழகம் முழுக்க திமுகவுக்கு சாதகமான சூழல் நிலவிய நிலையில், மயிலாடுதுறை தொகுதியில் திமுக வேட்பாளர் செ.ராமலிங்கம் வெற்றிபெற்றார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

வரும் தேர்தலில் மீண்டும் சீட் பெற ராமலிங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதே சமயம் 2014 தேர்தலைப் போல தங்களுக்கு மயிலாடுதுறை தொகுதியை மீண்டும் ஒதுக்க வேண்டும் என மமக கோரிக்கை விடுத்து வருகிறது. அதிமுக சார்பில் போட்டியிட மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், முன்னாள் எம்.பியும் தஞ்சை கிழக்கு மாவட்டச் செயலாளருமான பாரதி மோகன் ஆகியோர் விருப்ப மனு அளித்துள்ளனர். நாம் தமிழர் கட்சி சார்பில் மகளிர் பாசறை செயலாளர் காளியம்மாள் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். தொகுதியில் யார் போட்டியிடுவார்கள், யாருக்கு வெற்றிவாய்ப்பு என்பது விரைவில் தெரியவரும்.

Disclaimer:This Data is provided by the Association for Democratic Reforms (ADR) | MyNeta and sourced from election affidavits available in the public domain of the Election Commission of India.