Please enable javascript.திருப்பூர் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024, Tirupur constituency Lok sabha election results 2024 live updates in tamil

திருப்பூர் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024 (Tirupur Lok sabha election results 2024)

தமிழ்நாட்டின் தொழில் நகரமாக கருதப்படுவது திருப்பூர். தமிழக பொருளாதாரத்தின் திருப்பூரின் பங்களிப்பு கணிசமானது என்பதை யாராலும் மறுக்கப்பட்டது. அப்படிப்பட்ட திருப்பூர் மக்களவைத் தொகுதியின் அரசியல் சூழல், கள நிலவரம், யாருக்கு செல்வாக்கு அதிகம் என்பன போன்ற விவரங்களை இங்கு பார்ப்போம்.

திருப்பூர் மக்களவைத் தேர்தல் முடிவு

தொகுதி எண்: 18 | மக்களவைத் தொகுதி: திருப்பூர்
  • 2024
  • 2019
கே சுப்பராயன்4,72,739
CPIWON
வேட்பாளர் பெயர்வாக்குகள்முடிவு
பி அருணாசலம்3,46,811
AIADMKLOST
பி ஜனார்த்தனம்1,868
TMTHKLOST
கண்ணன் எம்1,765
INDLOST
பி கார்த்திகேயன்824
INDLOST
ஜி.மலர்விழி1,325
RSPSLOST
முருகானந்தம், ஏ.பி.1,85,322
BJPLOST
NOTA17,737
NOTALOST
வி பழனி6,054
BSPLOST
என் சதீஷ்குமார்2,336
INDLOST
எம்.கே.சீதாலட்சுமி95,726
NTKLOST
எம் ஆர் செங்குட்டுவன்1,567
INDLOST
என் சுப்ரமணி1,350
INDLOST
ஒரு வேலுசாமி7,125
INDLOST
மேலும் தெரிந்து கொள்ள
திருப்பூர் மக்களவைத் தேர்தல் தகவல்

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுள் 18-வது தொகுதி திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி ஆகும். 2009 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு வரை திருப்பூர் தொகுதி, கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதியாக அறியப்பட்டு வந்தது. 2009-இல் மேற்கொள்ளப்பட்ட தொகுதி சீரமைப்பை அடுத்து, கோபிச்செட்டிபாளையத்தில் இருந்த 4 சட்டமன்றத் தொகுதிகளுடன், கோவை மக்களவைத் தொகுதியில் ஓர் அங்கமாக இருந்த திருப்பூர் சட்டமன்றத் தொகுதியும் சேர்க்கப்பட்டு திருப்பூர் மக்களவை தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. தற்போது திருப்பூர் (வடக்கு), திருப்பூர் (தெற்கு), பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிப்பாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாக விளங்குகிறது திருப்பூர் மக்களவைத் தொகுதி.

1952 முதல் 2004 வரை நடந்த 13 மக்களவைத் தேர்தல்களில், திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் (அதாவது முந்தைய கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி) அதிமுக 6 முறை வெற்றி வாகை சூடியிருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக அதிமுக 6 முறையும், காங்கிரஸ் 4 முறையும், திமுக 3 முறையும் வெற்றி பெற்றிருக்கின்றன. திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி உருவாக்கப்பட்ட பின்னர், இதுவரை நடந்த மூன்று மக்களவைத் தேர்தல்களில் இரு முறை அதிமுக வாகை சூடியிருக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலில் திமுக அணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே. சுப்பராயன் வெற்றி பெற்றார்.

திருப்பூரை பொறுத்தவரை சென்னை, கோவைக்கு அடுத்தபடியான தொழில்நகரமாக விளங்குகிறது. சென்னைக்கு அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் மாவட்டமாக திருப்பூர் இருக்கிறது. பின்னலாடை உற்பத்தி தொழில்கள் தான் இங்கு இருக்கும் மக்களுக்கு பிரதான வேலைவாய்ப்பை தந்து கொண்டிருக்கிறது. பின்னலாடை சார்ந்த தொழிற்சாலைகள், சிறு நிறுவனங்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இங்கு இருக்கின்றன. வருடத்திற்கு சுமார் ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு வெளிநாட்டு ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை கொண்ட பகுதி இது. பின்னலாடை தொழிலுக்கு அடுத்தபடியாக விவசாயே பிரதான தொழிலாக இங்கு உள்ளது.

தொழில்நகரமாக உள்ளதால் அப்பகுதி மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளும் அது சார்ந்தவையாகவே உள்ளன. ஜிஎஸ்டி வரிவிதிப்பால் தொழில் நிறுவனங்களும், ஊழியர்களும் நஷ்டத்தை சந்திக்கின்றனர். விவசாயத்துக்கு நேரடி பாசனத்துக்கான நீதாரங்கள் எங்கும் இல்லாத நிலை இருக்கிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டுமே குடிநீருக்கும், பாசனத்துக்கும் ஒரே ஆதாரமாக உள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து கொண்டே போகிறது. இந்த தண்ணீர் தேவையை நிவர்த்தி செய்யவே, கடந்த பல ஆண்டுகளாக அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை மேற்கொள்வது குறித்து பேசப்பட்டு வந்தது. அது இப்போது தான் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை, இங்கு அரசியல் கட்சிகளின் வெற்றி - தோல்வியை தீர்மானிப்பது சாதிகள் தான். திருப்பூரில் கொங்கு வேளாளர் சமூகத்தினர் அதிக அளவில் உள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக அருந்ததியார் சமூகத்தினர் இருக்கிறார்கள். இவர்கள்தான் திருப்பூர் தொகுதியில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர். இங்குள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15,29,836. இவர்களில் ஆண்கள் 7,62,935 பேரும், பெண்கள் 7,66,765 பேரும் இருக்கிறார்கள். மூன்றாம் பாலினத்தவர்கள் 136 பேர் உள்ளனர்.

2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் திருப்பூர் மக்களவைத் தேர்தலில் திமுக அணியின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே. சுப்பராயன் களமிறக்கப்பட்டார். அவர் 5,08,725 வாக்குகளை பெற்று அதிமுக வேட்பாளர் ஆனந்தனை தோற்கடித்தார். அதிமுக வேட்பாளர் ஆனந்தன் 4,15,357 வாக்குகளை பெற்றிருந்தார்.

Disclaimer:This Data is provided by the Association for Democratic Reforms (ADR) | MyNeta and sourced from election affidavits available in the public domain of the Election Commission of India.