Please enable javascript.Tirunelveli Lok Sabha Election Result (திருநெல்வேலி மக்களவை தேர்தல் முடிவுகள் 2024), Tirunelveli Candidates List 2024, Tirunelveli Lok sabha election results 2024 live updates

திருநெல்வேலி மக்களவை தேர்தல் முடிவுகள் 2024 (Tirunelveli Lok Sabha Election Result 2024)

தென் தமிழகத்தின் மிக முக்கிய தொகுதியான திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி பற்றிய விரிவான அலசலை இங்கு காணலாம்.

திருநெல்வேலி மக்களவைத் தேர்தல் முடிவு

தொகுதி எண்: 38 | மக்களவைத் தொகுதி: திருநெல்வேலி
  • 2024
  • 2019
ராபர்ட் புரூஸ் சி5,02,296
CONGWON
வேட்பாளர் பெயர்வாக்குகள்முடிவு
அதிசயம் வி3,781
INDLOST
பாலசுப்ரமணியன்2,067
BSPLOST
பிஷப் டாக்டர் காட்ஃப்ரே வாஷிங்டன் நோபல்1,475
AJPKLOST
சந்திரன் எம்1,413
VTVTKLOST
சின்ன மகாராஜா கே1,895
INDLOST
டேவிட் எம்1,836
INDLOST
ஜான்சி ராணி எம்89,601
AIADMKLOST
குமார் வி1,072
PMTDKLOST
லெனின் கே1,450
INDLOST
முத்துராமன் ஏ1,048
AMKMLOST
நெயினார் நாகேந்திரன்3,36,676
BJPLOST
NOTA7,396
NOTALOST
பொட்டல் சுந்தர முனீஸ்வரன்19,852
INDLOST
ராகவன் சி எம்366
INDLOST
டாக்டர் ராஜேந்திர ரெத்னம் கே689
INDLOST
ராமகிருஷ்ணன் என்.790
NIDPLOST
சாமுவேல் லாரன்ஸ் பொன்னையா1,497
INDLOST
சத்யா87,686
NTKLOST
செல்வகுமார் எஸ்1,346
BHUDRPLOST
சேவல் கண்ணன் பி வழக்கறிஞர்636
INDLOST
சிவராம் கே875
INDLOST
சுரேஷ்788
INDLOST
தளபதி முருகன் எம்917
INDLOST
மேலும் தெரிந்து கொள்ள
திருநெல்வேலி மக்களவைத் தேர்தல் தகவல்

திருநெல்வேலி என்ற பெயரைக் கேட்டவுன் அல்வாதான் நிறையப் பேருக்கு நினைவில் வரும். அல்வா மட்டுமே திருநெல்வேலிக்கு பிரசித்தி பெற்றது அல்லது. நெல் வயல்கள் அதிகம் இருக்கும் ஊர் என்பதால்தான் இந்த ஊருக்கு திருநெல்வேலி என்ற பெயர் வந்ததாக வரலாறு உண்டு. வேளாண்மை மற்றும் சிறு தொழில்கள் இந்த மாவட்டத்தில் மிகவும் பிரபலமான தொழில்கள் ஆகும். தாமிரபரணி ஆறு திருநெல்வேலிக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. பாபநாசம், மணிமுத்தாறு போன்ற அணைகளும் இந்த மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்றவை.

தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுடன் ஒன்றாக இருந்த திருநெல்வேலி மாட்டத்தில் இருந்து 1986ஆம் ஆண்டில் தூத்துக்குடியும், 2019ஆம் ஆண்டில் தென்காசியும் பிரிக்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்தின் மக்கள் தொகை 33 லட்சத்துக்கு மேல் உள்ளது. இதில் தலா 16 லட்சம் ஆண்களும் பெண்களும் இருக்கின்றனர். தென்கிழக்கில் மன்னார்வளைகுடா, வடக்கே விருதுநகர், கிழக்கே தூத்துக்குடி, மேற்கே கேரளா மற்றும் தென்காசி, தெற்கே கன்னியாகுமரி மாவட்டங்களால் இந்த திருநெல்வேலி மாவட்டம் சூழப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியானது தமிழ்நாட்டின் 39 மக்களவை (பாராளுமன்ற) தொகுதிகளில் ஒன்றாகும். இதன் நாடாளுமன்றத் தொகுதி எண் 38 ஆகும். 2009 பொதுத் தேர்தல்களில் இருந்து திருநெல்வேலி மக்களவைத் தொகுதியானது ஆலங்குளம், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி மற்றும் ராதாபுரம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது. தொடக்கத்தில் (2009 தேர்தலுக்கு முன்பு) விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, திருவைகுண்டம், தூத்துக்குடி ஆகிய சட்டமன்றப் பகுதிகளைக் கொண்டிருந்தது.

கடைசியாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 2019ஆம் ஆண்டில் திமுக கட்சியைச் சேர்ந்த எஸ்.ஞானதிரவியம் வெற்றி பெற்றார். இவர் மொத்தம் 5,22,993 வக்குகளைப் பெற்றிருந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கட்சியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் 3,37,273 வாக்குகளைப் பெற்றிருந்தார். மொத்தம் 50.65 சதவீத வாக்கு வித்தியாசத்தில் ஞானதிரவியம் வெற்றியை ஈட்டினார். இதற்கு முந்தைய 2014 பொதுத் தேர்தலில் அதிமுக கட்சியின் பிரபாகரன் 3,98,139 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். முந்தைய காலங்களில் பார்த்தால் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கமும் இருந்துள்ளது.

அதிமுகவின் கோட்டை என்று கருதப்பட்ட திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 2019ஆம் ஆண்டில் திமுக வெற்றி பெற்று சாதனை படைத்தது. அதிமுக கட்சியில் இருந்து டி.டி.வி. தினகரன், சசிகலா போன்றோர் வெளியேற்றப்பட்டதால் கடந்த முறை அதிமுகவின் வாக்கு வங்கி குறைந்ததாவும், இதனால் திருநெல்வேலியில் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. கடந்த தேர்தலைப் போலவே இந்த முறையும் திமுகவின் ஆதிக்கமே இருக்கும் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.

Disclaimer:This Data is provided by the Association for Democratic Reforms (ADR) | MyNeta and sourced from election affidavits available in the public domain of the Election Commission of India.